Sunday, July 4, 2010
செவி சாய்க்க மாட்டீரா ?
தானாயும் திருந்தீராம், சொல் புத்தி கேளீராம்
வெட்டுவது எம்மையும், உமக்கான குழியையும் தான்..
பிள்ளை பறிகொடுத்த அன்னையாய் பூமித்தாய்
கதறுவது உம் செவியில் ஏறாதா…???
நீர் பிறந்தவுடன் தொட்டிலாயும்
மாண்டவுடன் கொள்ளியாயும் இடையில் பல
தேவைக்காயும் எம்மை நாம் அர்ப்பணிக்க
கிஞ்சித்தும் சிந்தியாமல் காடழித்து நாடு செய்தீர்
வெற்றிடங்கள் தோறும் கட்டடங்களாக்கி,
மழைக்கும், நிழலுக்கும் பரிதவித்தே ஏங்குகின்றீர்,
பட்சிகள் கூடற்றுப் பதற
எமை வெட்டிச் சாய்க்கும் போதினில்
சிறு செடியாவது நடுவதற்கு உமக்கு மனம்
ஏகாதோ, மனச் சாட்சி வதைக்காதோ....??
மனித உயிர் மலினப் பட்ட பூமியில்
என் குரலோ சபையேறும்…..!!!
மனதில் வைப்பாய் மானிடனே
ஆண்டு திளைக்க இப்பூமி உம் முன்னோர்
தரவில்லை உம் பிள்ளை உமக்காய்
விட்டிருக்கும் வாடகை மண்....!!!
ஆக்கத் தான் ஆகாதெனிலும்
அழிக்காமலேனும் கொடுத்திடு அவர் வசம் !!!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அருமையான கவிதை மஞ்சு
நல்ல சொல்லாடல் ..உண்மையான கருத்து ..
வாழ்த்துக்களோடு
// ஆக்கத் தான் ஆகாதெனிலும்
அழிக்காமலேனும் கொடுத்திடு அவர் வசம் !!!//
அருமை !!! அருமை!!!
விஷ்ணு ..
ஆக்கத் தான் ஆகாதெனிலும்
அழிக்காமலேனும் கொடுத்திடு அவர் வசம் !!!
உம் பிள்ளை உமக்காய்
விட்டிருக்கும் வாடகை மண்....!!!
//அருமை தோழி
நன்றி விஷ்ணு, உங்கள் வருகையும் கருத்தும் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.
நன்றிகள் பல அய்யப்ப மாதவன் அண்ணா....!
உங்கள் ஊக்கம் என் எழுத்தைச் செழுமைப்படுத்தட்டும்.
சரளா.... நன்றி தோழி, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.
Post a Comment