கிடையாய்க் கிடக்கவன்றே
கடையப்பட்டது சக்கரம்,
நிமிர்ந்து நின்றோடிடத் தான்
நிகழ்ந்திடும் மாற்றமே...
அச்சாணிப் பிடியில் சில்லும்
அசைந்திடல் போல,
நம்பிக்கையைப் பிடியாக்கி
நகர்த்திடு காலச் சக்கரத்தை.
ஓரிடத்தில் தரித்திடல் தேக்கமேயென
மேலும் கீழுமாய் உருளும்
சக்கரம் சொல்லிடும்,
வாழ்வின் நியதியும் அது போலாமே
உயர்வு தாழ்வு அடிக்கடி நிகழ்ந்திடும்.
கை ஏந்தி நின்றவர்
கை காட்டிப் பேசலும்,
உச்சத்தில் இருந்தவர்,
உடைந்து போய் வீழலும்
காலச் சுழற்சியாம்,
மாற்றமே மெய்யிங்கு
அறிவீர்காள் மேன்மக்காள்..!
முடிந்த கதை பேசியிங்கு
பயனில்லை கேட்பீர்காள்,
நம்பிக்கை கொண்டே
நாட்களைக் கழித்திடுங்கால்
சக்கரம் மேற் செல்லும்
மேன்மையும் கிட்டிடும்
வாட்டிடும் வாதைகள்
பொடிப் பொடியாகிடும்
அச்சாணியாய் நம்பிக்கையோடு
பொறுத்திருப்பீர் அது வரை ....!
Saturday, June 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//கை ஏந்தி நின்றவர்
கை காட்டிப் பேசலும்,
உச்சத்தில் இருந்தவர்,
உடைந்து போய் வீழலும்
காலச் சுழற்சியாம்,... See More
மாற்றமே மெய்யிங்கு
அறிவீர்காள் மேன்மக்காள்..//
மிக அருமை என்று சொல்லிவிட்டு விட முடியவில்லை.
தொடர்ந்து நிறைய எழுதுங்கள். ஒரு ஆணின்கையில் கொடுக்கும் விசயத்தை விட ஒருபெண்ணின் கையில் கொடுப்பவை தலைமுறை தாண்டி வளர்ந்து நிற்கும் என்பார்கள்.
பெண்களின் எழுத்து நாளைய முன்னேற்றம் அல்ல; இன்றைய திருத்தம். உலகின்நல்ல விசயங்களை தேர்ந்தெடுத்து நிறைய எழுதுங்கள்.
நன்றிகளும்.. வாழ்த்துக்களும்!!
வித்யாசாகர்
மிக்க நன்றி தோழர் உங்கள் வாழ்த்துக்கள் மிக மகிழ்வைத் தருகின்றன.
Post a Comment