புது வீட்டின் முற்றத்தில்
அமைதியாய் அழகாய்
கிளை பரப்பி பச்சென
நின்றது அந்த மாமரம்,
கண்டதுமே ஊஞ்சல் கட்டி
ஆடி விடத் துடித்து மனது,
ஊஞ்சலில் கிழிருந்து காலுன்னி
மேலெழ வயிற்றுக்குள்
கிளம்பும் ஜிவ்வென்ற உணர்வு
பயமா,பரவசமா........?
நீ முந்தி, நான் முந்தி எனச் சண்டை
போட்ட நாட்களும், முதுகுப் புறம்
நீயேறி நிற்க இருவராய்க்
களித்திருந்த நாட்களும்
இன்றும் அம் மரம் போலவே
அடிமனதில் பசுமையாய்..!!
மாம் பூவின் நறுமணத்தில்
மனம் தொலைந்த காலங்கள்,
பிஞ்சுகளை ஊஞ்சலில் போய்
எட்டித் தொட்ட நேரங்கள்,
முற்றமுதல் பறித்ததனை
அடிமரத்தில் குத்தி
யாருக்குந் தெரியாமல்
கடித்துண்ட போதெல்லாம்,
அம் மாமரமும் அதைத் தழுவிச்
செல்லும் காற்றுமே சாட்சியாய்,
காலை தோறும் தனியாக
மரத்திலெ வந்து குந்திக்
கூவிடும் குயிலுக்குக்
குரல் கொடுப்பதுடன் விடிந்தன
அழகான நம் நாட்கள்,
அணில் விரட்டி, அது கோதும்
பழம் திருடி நாமுண்ண
எமைப் பார்த்து தலையசைத்துச்
சிரிக்கும் மரம் நம்முடனே,
ஊஞ்சலிலே அமர்ந்திருந்து
பாடத்தை அசை போட்ட
போதெல்லாம், மரமும் அசையாமல்
நின்று தானும் கேட்பதாய்
பாவனை செய்வதை
ரசித்திருந்தோம் –
நம் பல ரகசியங்கள்
நமக்கும் மரத்துக்குமே
இன்றுவரை தெரிந்ததாய்..!!!
அங்கு நானும் இல்லை,
நீயும் இல்லை, மரம் மட்டும்
தனித்திருக்கும்,
இருக்குமென்று தான் நினைக்கிறேன்
உன்னையும், என்னையும் போல்
இரு சகோதரிகள் அதில் ஊஞ்சல் கட்டி
ஆடக் கூடும்,
நம் போலவே
அம்மரத்தை நேசிக்கக் கூடும்,
நேசிப்பார்களென்று தான் நினைக்கிறேன்.
Monday, June 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
சிறு வயதில் பாட்டி வீட்டுக்கு லீவுக்கு போனதெல்லாம் ஞாபகம் வந்து விட்டது மஞ்சு..
Monday, June 7, 2010
முற்றத்து மா மரம்.
புது வீட்டின் முற்றத்தில்
அமைதியாய் அழகாய்
கிளை பரப்பி பச்சென
நின்றது அந்த மாமரம்,
கண்டதுமே ஊஞ்சல் கட்டி
ஆடி விடத் துடித்து மனது,
ஊஞ்சலில் கிழிருந்து காலுன்னி
மேலெழ வயிற்றுக்குள்
கிளம்பும் ஜிவ்வென்ற உணர்வு
பயமா,பரவசமா........?
////////நீ முந்தி, நான் முந்தி எனச் சண்டை
போட்ட நாட்களும், முதுகுப் புறம்
நீயேறி நிற்க இருவராய்க்
களித்திருந்த நாட்களும்
இன்றும் அம் மரம் போலவே
அடிமனதில் பசுமையாய்..!!
///////////
நினைவுகள் என்று பசுமையானதுதான் என்பதை மீண்டும் ஒரு முறை ஞாபகம் செய்கிறது இந்த வார்த்தைகள் . மிகவும் அருமையானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி !
ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
மரங்களும் இருக்கின்றன,
மனங்களும் இருக்கின்றன
நேசமும் இருக்கின்றது இன்னும்...
துள்ளித்திரிந்த ஒரு காலத்தை நினைவு செய்தமைக்கு நன்றி...
மறந்த பல நினைவுகளை
உயிர்பித்து சென்றது
மலர்ந்த உங்கள்
இந்த நினைவுகள்
மஞ்சு ..
வாழ்த்துக்களோடு
விஷ்ணு ..
தேனக்கா : ///சிறு வயதில் பாட்டி வீட்டுக்கு லீவுக்கு போனதெல்லாம் ஞாபகம் வந்து விட்டது மஞ்சு..///
உங்கள் நினைவுகளை மீட்டியதில் எனக்கும் சந்தோஷமேக்கா....
வரவுக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
பனித்துளி சங்கர் : ///நினைவுகள் என்று பசுமையானதுதான் என்பதை மீண்டும் ஒரு முறை ஞாபகம் செய்கிறது இந்த வார்த்தைகள் . மிகவும் அருமையானக் கவிதை . பகிர்வுக்கு நன்றி !///
மிக்க மகிழ்ச்சி, அன்பான வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி தோழா. நீங்கள் சொல்லி இருக்கும் தொழில்நுட்பம் இன்னும் நான் செய்யவில்லை.. இன்று பார்கிறேன். மிக்க நன்றி தகவலுக்கு.
சிவா : ///மரங்களும் இருக்கின்றன,
மனங்களும் இருக்கின்றன
நேசமும் இருக்கின்றது இன்னும்...
துள்ளித்திரிந்த ஒரு காலத்தை நினைவு செய்தமைக்கு நன்றி...
///
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவா...!
விஷ்ணுவின் அன்பான வாழ்த்துதல்கள் வந்தடைந்தன.... மிக்க நன்றி தோழா.
Post a Comment