
முகமூடிகள் இத்துப் பொய்த்துப்
போனவோர் கணத்தில்
வக்கிர மனங்களின்
உக்கிரம் தாங்காது
மரணிக்கத் துடித்து
ஊசலாடும் மனதை
பாழும் பணமும்
பசப்பான பாசமும்
கட்டிப் போட்டுப் பேரம் பேச,
பந்தயப் பொருளான
சின்ன உயிர்
நொடிக் கொருக்கால்
செத்து மீளும்,
மனதறிந்து வருகை தந்த
காலதேவன் முகத்திரை
பிய்த்தெறிந்து முழுமனதாய்
ஏற்றுக் கொள்ள
கோரப் பற்கள் கொண்ட
முகமூடி பூண்டு குதறிய
சில முகங்கள் தாம்
தொலைத்து விட்ட அனுதாப
முகமூடிகளைத் தூசுதட்டி
அவசர கதியில் மாட்டிக் கொண்டு
அடுத்த கட்டக் காட்சிக்கு மாறும்.
பேரண்டப் பெருவெளியில்
சஞ்சரிக்கும் என் வசம் இல்லை
இப்போ முகமூடி..!
4 comments:
நல்ல கவிதை ..
மரணத்திற்கு பிறகு தான் மனிதனின் முகமூடி கிழித்தெறியப்படுகிறது ..
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் தோழியே ..
nice blog akka. gud rythm u r trying to use.. nice
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி விஷ்ணு.
///nice blog akka. gud rythm u r trying to use.. nice///
கோபி உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி...!
Post a Comment