சேர்ந்திருந்த காலங்கள்
பனியாய் உருகியதே,
நீண்டிருக்குந் தனிமையதில்
வதைபடுது என் மனமே,
மின்னலென விழி வெட்டி
வீழச் செய்தெனைச் சாம்பலாகிச்
சென்றனையே, மின்னலில்
பிறந்த காட்டுத் தீயிலென்
உயிர் பற்றியெரியுதடி.
ஊருக்குட் புகுந்த சமுத்திரமாய்
ஆக்கிரமித்தவோர் பொழுதில்
கண் சொருகிக் கனாக் கண்டதென்
பேதை மனம் சுருட்டியள்ளிச்
செல்வாயென, கசக்கிப் போட்ட
பாதகியே துருவானதெந்தன் நெஞ்சம்.
உனக்காய் நட்டு வைத்த
மல்லிச் செடி மதாளித்துப்
பூக்குகையில், வெண்பூக்கள்
பார்த்தென்னை ஏளனமாய்ச் சிரிக்குதடி
கொம்பற்ற கொடியாய்
வீழ்த்தினாயே எனை மண்ணில்.
நினைவுகளை அழித்து விட
நிலையான வரம் வேண்டித்
தொழுகின்றேன், ஆனாலும்
தாய்மடி தேடி மீளும் ஆலம் விழுதாய்
வேர் விடுகிறதே பலமாய் என் செய்வேன்...!!!
Thursday, May 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
nice manchu
Post a Comment