
ஆழ்துயில் கனவாய்
நிகழ்ந்தவை மறந்திடும்
எத்தனிப்புக்கள் தோல்வியுற,
நினைவுகளின் துரத்தல்களில்
திணறிக் கண்மூடிக் கிடப்பதே
பெரும்பாடாய்.....!
இருள் விழுங்கிச் சிவக்கும்
அதிகாலைச் சூரியனும்,
மணியோசையுடன் போட்டிபோடும்
புள்ளினங்கள் குரலிசையும்,
மண்மணமும், மென் காற்றும்,
மழலையும், மணாளனும்
மட்டுமே போதுமென்று
பல நேரம் மனமெண்ணும்,
பொல்லாத உலகத்தில்
இவைமட்டும் போதாவே.....!
பருவமாற்றப் பட்சிகளை
அலட்சியப் பார்வைகள் சிதைக்கா,
கவனம் யாவும்
முதலைக்கோ, அலைக்கோ
வசப்படாமல் மீளலாகும்...!
வருகையின் தடங்கள் மட்டும்
அழியாமல் சிலகாலம்
இருக்கும், பறவை எழுந்தபின்
கண நேரம் சிலிர்த்து ஆடிடும்
மரக் கிளை போல......!
7 comments:
super akka :)
நன்றி செந்தூ....!
அட.... சொல்லவே இல்ல எப்பல இருந்து பதிவுலகில காலடி வச்சீங்க...
வருக.. வருக..
@ பவன் : 2 நாளைக்கு முந்தித் தான் இந்த அசம்பாவிதம் நடந்தது, இருங்க இன்னும் ஒரு தளம் தொடங்கப் போறன் மொக்கைப் பதிவுகளுக்காக மட்டும்.....:)
//இன்னும் ஒரு தளம் தொடங்கப் போறன் மொக்கைப் பதிவுகளுக்காக மட்டும்.....:)//
அட.... நம்ம ஜாதி..:p தொடங்குங்க தொடங்குங்க... எதிர்பார்க்கிறோம்
realy good job.......supper akka...
மிக்க நன்றி ஸ்வாமி....!
Post a Comment