Monday, May 10, 2010
கண்ணாடி உறவுகள்...
தொடரும் மௌனங்களுடன்
கரையும் பொழுதுகள்,
முனகல்கள் வார்த்தைகள்
என உதிர்க்கப்பட்டன
எடுக்கவும் கோர்க்கவும் படாமல்
பல நேரங்களில் அவை
அங்கேயே பரவிக் கிடந்தன.
இரும்புக் கவசமணிந்த
ஒரு உறவும் இங்கில்லை.
கண்ணாடி வார்ப்புக்களாய்
வார்த்தைச் சகதிக்குள் மூழ்கி
சில நேரம் நொருங்கியும்
பல நேரம் விரிசலுற்றும்
இலக்கற்று இழுபட்ட படி....!
விரிசல்களையும் நொருங்கல்களையும்
பிரயாசையுடன் பிறிதொரு
நாளில் அவையே ஒட்டிச் சீர் செய்தன,
இல்லையில்லை அப்படிக்
காட்டிக் கொண்டன,
உருவம் திரும்பக் கிடைத்தாலும்
அதே நெருக்கத்தைத்
தர மறந்தனவா, இல்லை
தர முடியாமல் திணறினவா
சிந்திக்கப் பிடிக்கவில்லை,
எது எப்படியிருந்தாலும்
சிதைந்த போது
வெளியே தூக்கி வீசப்பட்ட
இதயத்தை கூட்டியள்ளி
உள்ளே வைத்துப்
பக்குவமாய் பூட்டி
முகத்திலும் பொய்யாய்ப்
புன்னகையைப் பொருத்தி
மீண்டுமொரு தாக்குதலுக்கு
தளராமல் தயார் நிலையில்.........!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
nice kavithai, send the kavithai a lot to my mail id velan.ramesh@gmail.com, because i like kavithai
Regards,
Ramesh Velan
சட்டென வருகிற கோபங்களினால் மிக நெருங்கிய மனிதர்களிடம் நானும் பலமுறை சாட்டையை சுழற்றியிருக்கிறேன், பிறகு அதற்காக வருந்துவதும், மன்னிப்பு கோருவதும்; இன்று வரை தொடர்கிறது. கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாமல் தவிக்கும் அவ்வேளை மிகக் கொடூரமானது.
அப்படி ஒரு தருணம் தான் உங்களை இந்த கவிதையை எழுத தூண்டியிருக்கும் என எண்ணுகிறேன்..உங்கள் வலியை என்னால் உணற முடிந்தது! அதை பகிர்ந்து கொள்வதே நமது தோழமையின் பயன்..
அன்புடன்,
மயில்வண்ணன்..
@ ரமேஷ், நன்றி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் தோழரே....! என் கவிதைகளை முகநூலில் பார்க்கலாம், எல்லாவற்றையும் இங்கும் பதிவிட உள்ளேன், நிச்சயம் மின் அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.
@ மயில்வண்ணன்:
///கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாமல் தவிக்கும் அவ்வேளை மிகக் கொடூரமானது.
அப்படி ஒரு தருணம் தான் உங்களை இந்த கவிதையை எழுத தூண்டியிருக்கும் என எண்ணுகிறேன்..///
உண்மை தோழா, கடினமான சொற்பிரயோகங்கள் தாங்கொணா வலியையும் வேதனையையும் சட்டெனத் தந்துவிடுகின்றன, கவலையான மனநிலையைக் கவிதைகளால் கடந்துவிட முடியும் என்பதை, இக்கவிதை எழுதிய அன்று உணர்ந்தேன்...!
வரவுக்கும் பதிவுக்கும் நன்றிகள்.
வணக்கம்...!
நான்தான் காஞ்சி முரளி...!
நான் முகநூலில்...
குறிப்பாக... சகோதரி மலிக்காவின் "People You May Know"வில் தங்கள் "க-விதை"யை கண்டு... புதிய வரவாய் தங்கள் தளத்திற்கு வந்துள்ளேன்...!
நான் தங்கள் "க-விதை" என்றதும்... தங்கள் தளம் முளைவிடும் சிறு செடியென்று(sorry)... தவறாய் நினைத்துவிட்டேன்...!
"கண்ணாடி உறவுகளை" கண்டபின்தான்... தங்கள் "விதை" ஓர் விழுதுகள் பதித்த ஆலவிருட்சத்தின் "விதை" என்பதைக் கண்டேன்...
வியந்து போனேன்...!
நா... ஒரு டியூப் லைட் மேடம்....!
உங்க கவிதைய நிதானமா படிச்சாத்தான் எனக்கு புரியிது...! அதனால்... இன்றுதான் தங்கள் முதல் (க-விதை இல் மே 10 ல்) கவிதையை படித்தேன்...
மிகமிக அற்புதம்... அருமை...!
பொறுமையாய்... ஒவ்வொரு கவிதையையும் படித்து... அவ்வப்போது என் கருத்துக்கள் தெரிவிக்கிறேன்...
(நான் எல்லோர் இடுகைக்கும்... தளத்திருக்கும்... செல்வதில்லை... கவிதைகள் கவிதைகளாய்... கட்டுரைகள் கட்டுரைகளாய் வடிக்கும் தளத்திற்கு மட்டுமே நான் செல்வேன்...
நம் எண்ணங்கள்... மற்றவர் ஏற்கிறார்களோ அது வேறுவிஷயம்....!
ஆனால் மற்றவரை புண்படுத்தாத கருத்துக்கள் உள்ள கவிதை, கட்டுரை, எண்ணங்கள் கொண்ட பதிவிற்க்குதான் செல்வேன்... படிப்பேன்... படித்ததும் நிச்சயம் பராட்டுமுண்டு...! விமர்சனமும் உண்டு...!)
நட்புடன்...
காஞ்சி முரளி....
Post a Comment