நெடிதுயர்ந்து வான் தொடும்
கட்டிடங்களின் வரிசைகளிலும்
கரு நாகமாய் நீண்டு நெளியும்
சாலைகளோர பகட்டான
மின் கம்ப நேர்த்தியிலும்,
மூன்று நிமிடங்களுக் கொன்றாய்
உயரும் விண்ணூர்திகளிலும்
பரந்து விரிந்த நீலம்
குடித்த கடற் பரப்பிலும்,
மனம் மயங்கிய நாட்கள் போயின,
எதிலுமே பற்றற்றுக்
கனவுகளைப் பாலை நிலப்
புழுதியுடன் கரைத்த படி
மணற் துணிக்கை அள்ளி வரும்
அனல் காற்றின் வெம்மை சுகித்து
கண்கள் கசங்கி, வியர்வை குளித்து
நாட்களும் தவமிருக்கின்றன - என்னுடன்
ஆவலாய் உனைக் காண….!!!
கட்டிடங்களின் வரிசைகளிலும்
கரு நாகமாய் நீண்டு நெளியும்
சாலைகளோர பகட்டான
மின் கம்ப நேர்த்தியிலும்,
மூன்று நிமிடங்களுக் கொன்றாய்
உயரும் விண்ணூர்திகளிலும்
பரந்து விரிந்த நீலம்
குடித்த கடற் பரப்பிலும்,
மனம் மயங்கிய நாட்கள் போயின,
எதிலுமே பற்றற்றுக்
கனவுகளைப் பாலை நிலப்
புழுதியுடன் கரைத்த படி
மணற் துணிக்கை அள்ளி வரும்
அனல் காற்றின் வெம்மை சுகித்து
கண்கள் கசங்கி, வியர்வை குளித்து
நாட்களும் தவமிருக்கின்றன - என்னுடன்
ஆவலாய் உனைக் காண….!!!
12 comments:
செய்யும் வேலை, மற்றும் ஊதியங்களில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம்.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்களின் பலரின் ஏன் அனைவரின் மனநிலையும் இதுதான்...!!!
அனைவரின் நெஞ்சிலும் ஒரு ஏக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது....!!!
தோழமையுடன்... பாபு.
கடும் தவம் புரிந்து காசு சேர்த்த நானும் இன்று உறவுகளின் கரங்களில் சந்தோஷ வரங்களைப் பெற்று சாதாரண வாழ்க்கையில் சங்கமித்துக்கொண்டிருக்கின்றேன்....
அழகான வரிகள் வாழ்த்துக்கள் அக்கா...!
நான் என்ன சொல்ல..??
உனக்கு எல்லாமே நலமாய் அமையட்டும்..
விரைவில்...
-உன் அம்மு...
ஏக்கத்தின் வடிகாலாகக் கவிதைகள்.
பாபுவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்...!
நிரோஷ் இங்கு வேலை செய்பவர்களுக்கு மட்டுமே பாலைவன வாழ்க்கை பற்றித் தெரியும்...! நமக்கு நாம் ஆறுதல் சொல்லிக் கொள்வோம், எல்லாருக்கும் ஒவ்வொரு வித கடமைகள் நிமித்தம் வந்திருக்கிறோம். ஊர் திரும்பும் வேளையை ஆவலாய் எதிர்பார்த்தபடி...!
நன்றி தம்பி, வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும்.
///நான் என்ன சொல்ல..??
உனக்கு எல்லாமே நலமாய் அமையட்டும்..
விரைவில்...
-உன் அம்மு///
உன் வாக்கு சீக்கிரமே பலிக்கட்டும் அம்மு.
yella tholaivukalum onrai namakku kodukkirathu..puthithaai nammai unarkira kaalam
santhosamaanathuthaan..aanaal anniyamaaka iruppathu suyam tholaiththa mukaththin theera vali....nam sorkal mattumthaan nammai yella thuyarangkalilirunthum neekki selkirathu...un sorkal unakkuth thunaiyirukkum yella kaalaththirkum
அருமை மஞ்சு.. தொடர்ந்து எழுதும்மா
வாழ்த்துக்கள்
நன்றி சரவணன்.....! உன்னை நான் அடைய இந்தத் தவம் காரணமாயிற்று....!
தேனக்கா உங்கள் வாழ்த்து என்றும் எனக்கு இனிமையானவை, நன்றிக்கா...!
அருமையான ஆழமான பதிவு தோழி மனதை நெகிழ செய்கிறது உங்கள் வார்த்தைகள்
@ Saralafrom : நன்றி தோழி, உங்கள் வரவும் வாழ்த்தும் மிக்க மகிழ்வளிக்கிறது.
Post a Comment