Monday, May 17, 2010
இப்ப எனக்கு வேணும்..!!!
கேட்டதெல்லாம் வாங்கித் தரும் அப்பா
இப்ப வேணும்……..!
கேக்காமலே உண்ணத் தரும் அம்மா
உடனே வேணும்….!
செல்லச் சண்டை போட்டு ரொம்ப
நாளாப் போச்சு,
ஒளிச்சு விளையாடியது போதும்,
சின்னக்காவும் பெரியக்காவும்
தோற்றேன் நானே வா… வா…!
பள்ளிக்கூடம் மீண்டும் போக
கொள்ளை ஆசை எனக்கு…!
போடச் சட்டை, சப்பாத்து வாங்கித் தரும்
மாமாவையும் காணோம்…!
அம்மா அடிக்கும் போது அத்தை மடியே தஞ்சம்
ஆமி மாமா கூட்டிப் போன,
அவவைத் தேடித் தேடியே
கண்கள் சோர்ந்து போச்சு..!
சொன்ன கதையைத் திரும்பச் சொல்லும்
தாத்தா கூட இல்லை...!
தட்டிக் கொடுத்துத் தூக்கம் ஆக்கும்
பாட்டி எங்கு போனா…??
”ஆவலுடன் தேடுகிறோமில்”
என்னப் போலவே ஒரு
சுட்டிப் பையன் படமிருக்காம்,
ஒரு அக்கா வந்து சொன்னா,
என் பெயர் என்ன
என்று அவவும் என்னைக் கேட்டா,
அம்மாவுக்கு “கண்ணா”, அப்பாவுக்கு “செல்லம்”,
தாத்தா, பாட்டி சொல்லும் பெயர் “ராசா, கடவுள்”,
அந்தப் பெயர் எதுவும் அதில் இல்லை எண்டு
சொல்லி விட்டுப் போனா.
அகதிச் சிறுவன், அநாதைப் பையன்
என்றும் இப்ப என்னைச் சொல்லினம்
அந்தப் பெயர் இருக்கா
என்று கேக்க வேணும் அவவிடம்...!
இப்ப எனக்குத் தெரிஞ்சதெல்லாம்
பசி, தூக்கம் மட்டும் தான்
அதுக்கெண்டாலும் ஒரு
வழி பண்ணுங்கோவன்
யாரெண்டாலும் நீங்கள்…..!!!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
pain....
வேதனை .. வேதனை ..
கூப்பிடு தூரத்தில் இருந்தும் ,
என் இன மக்கள் மடிவதை வேடிக்கைப் பார்த்த
என் இந்திய ஆட்சியாளர்களை,
கண்டு குமுறும் என் போன்றோரின் இதயங்களின்
வெம்மையின் தழல் நிச்சயம் ஒரு நாள் சுடும்...!!!
செந்து: /// pain///
ஆம் செந்து, கொடிய வலி.
விஷ்ணு : /// வேதனை..வேதனை..//
ஈழத் தமிழர்களுக்கு அதுவே வாழ்வாகிப் போனது விஷ்ணு.
பாபு : ///கூப்பிடு தூரத்தில் இருந்தும் ,
என் இன மக்கள் மடிவதை வேடிக்கைப் பார்த்த
என் இந்திய ஆட்சியாளர்களை,
கண்டு குமுறும் என் போன்றோரின் இதயங்களின்
வெம்மையின் தழல் நிச்சயம் ஒரு நாள் சுடும்...!!!///
ம்ம், விடியலுக்காய் காத்திருக்கிறோம். நன்றி உங்கள் உணர்வுகளுக்கும் கருத்துக்கும் பாபு.
Post a Comment